editor@gmail.com

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர்

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர்

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று காலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வர வேண்டிய சில விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட நிலையில், அந்த விமானங்களிலேயே இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அழைத்து வரப்பட்டவர்களில் மஹவத்தே சாமர, குடு துமிந்த உள்ளிட்ட பல முக்கிய குற்றவாளிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களை தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

மஹவத்தே சாமர உடனடியாக CID-க்கு ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், மற்ற சந்தேகநபர்களின் பின்னணி மற்றும் குற்றச்செயல்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, சர்வதேச குற்ற வலையமைப்புகளுக்கு எதிரான இலங்கையின் கடும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

முகப்பு திடீர்செய்தி துயர் தொடர்பு