editor@gmail.com

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிய முன்னேற்றம் பதிவாகியது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிய முன்னேற்றம் பதிவாகியது

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று ரூ.353.17 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இது ரூ.354.03 ஆக இருந்த நிலையில், ரூபாயின் மதிப்பில் சிறியளவிலான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

இருப்பினும், சந்தையில் டொலரின் மதிப்பு இன்னும் உயர்ந்த நிலையிலேயே இருப்பதால், இறக்குமதி பொருட்களின் விலை மற்றும் வாழ்க்கைச் செலவு மீது தொடர்ந்து அழுத்தம் நீடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

▶ வீடியோ காட்சி

முகப்பு திடீர்செய்தி துயர் தொடர்பு